பக்கம்:விடிவெள்ளி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ) 93 10. எதிர்பாராதது ! ' களப்பிரர்கள் வீழ்ச்சியுறுவதற்குரிய காலம் நெருங் கிக் கொண்டிருக்கிறது: * வருவது கண்டு கூறும் கூர்த்த மதியினர் போல் திட மான குரலில் அழுத்தமாக அறிவித்தார், புலவர் . மூல னார். . அதறகுரிய நிமித்தங்கள் ஏதாவது தோன்றி உள்ள னவோ?’ என்று பணிவுடன் கேட்டாள் மங்கையர்க்கரசி. சிந்தனையில் ஆழ்ந்துவிட்டவர்போல் சிறிதேமோனத் திலிருந்த புலவர் அவள் பக்கம் திரும்பி ஊம்? என்றார். ஆள்வோர் அழியும் காலம் அருகிறது என அறிவிக்கப் பல குறிகள் தோன்றும் என்று கேள்விப்பட்டிருக் கிறேன். வால் வெள்ளியின் தொடர்ச்சியான தோற்றம், அச்சுறுத்தும் நில நடுக்கம்...' மங்கையர்க்கரசியின் பேச்சைக் கேட்டுச் சற்றே நகை புரிந்தார் அவர். களப்பிரரின் வீழ்ச்சியை அறிவிப்பதற்கு அத்தகைய புறச்சான்றுகளும் தேவையோ? ஆள வந்தவர் கள் அகந்தை மிகக்கொண்டு வெறித்தனமாகச் செயலாற் றத் துணிந்தாலே, அவர்களுடைய வீழ்ச்சிக்கு அடிகோலி பயிேற்று என்று தானே பொருள்? மக்கள் நலனைக் கருத் திலே கொள்ளது, தமது நன்மைகளைப் பெருக்கும் செயல்களில் ஈடுபட்டு, கதிகெட்டு, மண்ணகத்தோருக்குத் தீமை புரிவதிலே இன்பம் காணத் தொடங்கி விட்டால், அம்ம்மதையாளர்கள் மண்ணைக் கவ்வும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றுதானே நாம் கொள்ள் வேண் டும்?” - மங்கையர்க்கரசி மறுத்துரைக்கவில்லை. ஆயினும் தனது ஐயத்தைப் போக்கிக்கொள்ள விரும்பியவனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/94&oldid=906211" இலிருந்து மீள்விக்கப்பட்டது