பக்கம்:விடிவெள்ளி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விடிவெள்ளி வன குறித்தும் அவரே வழி காட்டுவார்' என்று மங்கை யர்க்கரசி அறிவித்தாள். "நீங்கள் செய்யும் உதவியை நான் மறக்கமாட்டேன் என்றான் வழுதி. பயணத்துக்குத் தயாராகலாம். உனக்குத் தேவை யான குதிாையைச் சாத்தின் பிறகு கொண்டு வருவான்' என் ஆம் அவள் தெரிவித்தாள். * இளம்வழுதி விடை பெற்றுக் கொண்டு வெளியேறி னான். அவர்களுடைய செயல்கள் பலவும் மர்மங்கள். நிறைந்ததாகவே தோன்றின. அவனுக்கு. அந்த அம்மை யார் காட்டும் வழியைப் பின்பற்றுவதா கூடாதா என்ற தயக்கமும் உண்டாயிற்று. முடிவில், வருவது வரட்டும். எவ்வழியைப் பின் பற்றினாலும் நமக்கப் பெரும் நஷ்டம் வந்துவிடப் போவ தில்லையே? உயிருக்காகப் போராட வேண்டிய நெருக்கடி யான கட்டங்கள் எகிர்ப்படலாமோ? வைர நெஞ்சும் எஃகு போல் உறுதி பெற்று கரங்களும் இல்லாமலா போயின நம்மீட ம்! எனத் தேர்ந்தான் அவன். கவலை பற்றுச் சென்றான். திடீரென்று அவன் கால்கள் தயங்கின. அவனுக்கு முன்னால் சிறிது தொலைவில் வேகமாகச் சென்றுகொண் டிருந்து ஆள் தான் அவன் நடைக்குக் கட்டுப்பாடு விதித். தது. அவனுக்குத் தெரிந்த-ஆரம்பம் முதலே அவனைச் சந்தேகிக்கத் துணிந்த-துறவி அடியார்க்கு நல்லான்தான் போய்க் கொண்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்கவில்லை என உணர்ந்து கொண்ட இளம்வழுதி அவனைப் பின் தொடர்ந்து செல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/99&oldid=906221" இலிருந்து மீள்விக்கப்பட்டது