பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

74. அன்னதான மண்டபத்தில்
      அழகான குருவி.
      அழகான குருவிக்கு
      முழம் நீளம் வால்!

75. என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்;
      என்னை விரும்பாத வீடே இல்லை.

76. தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது.

77. அறைகள் அறுநூறு அத்தனையும் ஓர் அளவு.

78. உருவமில்லாதவன் சொன்னதைத் திருப்பிச் சொல்வான்.

79. குளித்தால் கறுப்பு: குளிக்காவிட்டால் சிவப்பு.

80. நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு
      நறுக்கென்று கடிக்கிற வேலை.

81. தாய் இனிப்பாள்;
      மகள் புளிப்பாள்.
      பேத்தி மனப்பாள்.

82. உண்டதை நினைப்பான்,
      உதையை மறப்பான்,
      உயிரையும் கொடுப்பான்,
      வழியும் நடப்பான்.

83. காலையில் ஊதும் சங்கு:
      கறி சமைக்க உதவும் சங்கு.

84. கறுப்புச் சட்டைக்காரன்;
      காவலுக்குக் கெட்டிக்காரன்.

85. தொட்டால் மணக்கும்;
      குடித்தால் புளிக்கும்.

86. நடக்கத் தெரியாதவன்
      நடப்பவனுக்கு வழி காட்டுகிறான்.

87. ஏரிக்கரை உயர்ந்திருக்கும்,
      எட்டிப் பழம் சிவந்திருக்கும்,
      காகம் கறுத்திருக்கும்,
      காக்கைக் குஞ்சு வெளுத்திருக்கும்.

88. இரவிலே பிறந்த இளவரசனுக்குத்
      தலையிலே குடை.