பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

89. உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ - அது என்ன?

90. ஈரப் புடவைக்காரி
      இருபத்தெட்டுச் சுற்றுக்காரி.

91. ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன்
      ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்;
      ஆனாலும், நனையமாட்டான்.

92. வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு - அது என்ன?

93. சூரியன் காணாத கங்கை;
      சுண்ணம் தோற்கும் வெள்ளை;
      மண்ணிற் பண்ணாத பாண்டம்.

94. பறிக்கப் பறிக்க பெரிதாகும்
      அது என்ன?

95. வட்ட வட்டச் சிமிழில்
      இட்டதெல்லாம் குட்டிப் பாம்பு.

96. தேய்க்கத் தேய்க்க துரைக்கும்
      அடிக்க அடிக்க வெளுக்கும்.

97. எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம்.

98. மொட்டை மாடு உட்கார்ந்திருக்குது;
      மூக்கணாங்கயிறு மேய்ந்து வருகுது.

99. வராதிருந்து வந்தேன்;
      வந்துவிட்டுப் போனேன்;
      போன பிறகு வந்தேன்;
      இனிப் போனால் வரமாட்டேன்.
      நான் யார்?

100. பிளந்த நாக்குடையவனாம்; பாம்புமல்ல
        பேசாமல் பேசுபவன்; ஞானியல்ல.

101. விழித்திருக்கும் போதே அடித்துக் கொண்டிருப்பான்.

102. சின்னச் சின்னச் சாத்தான்,
        வயிறு பெருத்துச் செத்தான்.

103. ஊரெல்லாம் மூடியிருக்கும் - ஆனால்
        ஊறுகாய்ப் பானை திறந்தே இருக்கும்.