பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

134. கண்டதுண்டமாய்க் கரியைத் தின்பேன்.
        கண்கள் இல்லாமல் காதம் போவேன்.
        தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பேன்.
        குரல் இல்லாமல் கூச்சல் போடுவேன்.

135. ஜாடி மேலே குரங்கு.

136. இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
        நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
        முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.

137. பொரி பொரித்தேன்; பொட்டியில் வைத்தேன்.
        விடிந்து பார்த்தேன்; வெறும் பொட்டி இருந்தது.

138. முதுகிலே இருப்பது கூடு - அது மீனாக்குட்டிக்கு வீடு.

139. வெய்யிலில் காய்வேன்; மழையில் நனைவேன்.
        அண்டி வந்தவர்க்கு அடைக்கலம் தருவேன்.

140. இத்தனூண்டு தண்ணிக்குள்ளே
        சித்திரப் பூ பூத்ததாம்.

141. பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான்.

142. அரியலூரு அம்மாமி அதிகப் பிள்ளைக்காரி,
        பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில்
        பலே கெட்டிக்காரி.

143. நடலாம்; பிடுங்க முடியாது - அது என்ன?

144. வால் நீண்ட குருவிக்கு
        வாய் உண்டு; வயிறில்லை.

145. மூன்று கொம்பு மாடு: ஒரு கொம்பால் குத்துது.

146. பிள்ளை பிறந்தது; பிறந்ததும் எழுந்தது.
        எழுந்து நாலு பேரைக் கடித்தது.

147. எங்கள் அப்பா பணத்தை எண்ண முடியாது;
        எங்கள் அம்மா புடவையை மடிக்க முடியாது.

148. தவழும்போது ஒரு பெயர்,
        விழும்போது வேறு பெயர்,
        உருளும்போது இன்னொரு பெயர்.