பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

195. சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்.
        விரித்தால் நான் அவனுக்கு அடக்கம்.

196. கால் ஆறு: சிறகு இரண்டு;
        கண் இரண்டும் கடுகுபோல.
        ஈயாடா இளிச்சவாயா,
        இன்னுமா தெரியவில்லை.

197. மரம் ஏறினால் வழுக்கும்;
        காய் தின்றால் துவர்க்கும்;
        பழம் தின்றால் இனிக்கும்.

198. ஒட்டமாய் ஒடும்; உருண்டு உருண்டு ஒடும்.
        பள்ளத்தைக் கண்டால் பாய்ந்து பாய்ந்து ஒடும்.

199. பச்சைப் பங்களாவிலே,
        வெண்பட்டு மெத்தையிலே,
        கறுப்புத் துரை தூங்குகிறார்.

200. மஞ்சள் சேலை கட்டி,
        மங்கையர் பத்துப் பேர்,
        கயிற்றைப் பிடித்துக் கொண்டு
        கடையிலே தொங்குகிறார்.

201. காலில்லாத கள்ளன்
        கால் உள்ளவனைப் பிடித்தான் - அதைத்
        தலையில்லாதவன் பார்த்துக் கல
        கலவென்று சிரித்தான்.

202. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி.

203. அரைக்கிற ஆலைதன்னில் அடைந்து கிடக்கும் ஒரு பாம்பு,
        அசைந்து அசைந்து ஒடினாலும், ஆலையில் அகப்படாது.

204. ஊருக்கு நாட்டாண்மைக்காரர்,
        சாப்பிட்டால் இலை எடுக்க மாட்டார்.

205. முள்ளு முள்ளுக்குள்ளே,
        வைக்கோல் பத்தைக்குள்ளே,
        வந்திருக்கிறாள் சீமாட்டி,
        வயிற்றுப் பிள்ளையோடே