பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

217. அம்மா கொடுத்த தட்டிலே
        தண்ணிர் விட்டேன்; நிற்கவில்லை.

218. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை.

219. மரம் ஏறும் மங்காத்தாளுக்கு
        முதுகிலே மூன்று சூடு.

220. உருவம் இல்லாத மனிதன்,
        உலகமெல்லாம் கற்றுகிறான்.

221. எண்ணெய் வேண்டாத விளக்கு;
        எடுப்பார் கை விளக்கு;
        கண்ணிர் விட்டு விட்டுக்
        கரைந்திடும் விளக்கு.

222. மூட்டை தூக்கி முத்தையன்
        நத்தையல்ல;
        தண்ணிரில் இருக்கும் தத்தையன்
        தவளையல்ல.

223. உண்டுவிட்டு உண்டுவிட்டு உறங்குவான்.
        அவன் யார்?

224. ஒருவனைக் கூப்பிட ஊரையே அழைப்பான்.

225. கடித்தால் கடிபடாது; பிடித்தால் பிடிபடாது

226. சுட்டவன் சந்தைக்குப் போகிறான்.

227. பல்லைப் பிடித்து அழுத்தினால்,
        பதறிப் பதறி அழுவான்.

228. பாறையின் மேல் கோரை;
        கோரைக்குள்ளே குறவன்.

229. வீடில்லா நகரங்கள்;
        நீரில்லா சமுத்திரங்கள்.

230. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும்
        ஆற்றுக்குப் போச்சு;
        வெள்ளேக் குதிரை வீட்டுக்கு வந்தது;
        கறுப்புக் குதிரை ஆற்றோடு போச்சு.