பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

246. ஓங்கி உயர்ந்து வளரும். அதற்கு
        இலையுண்டு; கிளையில்லை; தென்னையல்ல;
        நடுவே கணுக்கள் உண்டு; மூங்கிலும் அல்ல.

247. செக்கச் சிவந்திருப்பாள்;
        செவ்வாழை போல் இருப்பாள்;
        வாலும் முளைத்திருப்பாள்;
        வந்திருப்பாள் சந்தையிலே.

248. கொதிக்கும் கிணற்றில் குதிப்பானம்.
        கூச்சல் இல்லாமல் குளிப்பானாம்.

249. விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்.
        வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான்.

250. ஆள் ஏறும் குதிரைக்கு அங்கமெல்லாம் கண்.

251. வெள்ளைக் கொல்லை; கறுப்பு விதை,
        கை விதைக்கும்; வாய் கொறிக்கும்.

252. வீட்டிலே இருக்கிற அண்டாவுக்குக்
        காதும் இல்லை; மூடியும் இல்லை.

253. பரட்டத்தலை மாமியாருக்குப்
        பவளம்போல் மருமகள்.

254. பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக்
        கையிலே ஒரு டை;
        தலையிலே ஒரு டை.

255. மாவிலே பழுத்த பழம்,
        மக்கள் விரும்பும் பழம்.

256. மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து
        மகாதேவனுக்குப் பூசை ஆகுது.

257. பகலில் துயிலுவான்;
        இரவில் அலறுவான்.

258. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.

259. விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது.