பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

272. ஒற்றைக்கால் கறுப்பனுக்கு
        எட்டுக் கை.

273. கிண்ணம் போல் பூ பூக்கும்;
        கிள்ளி முடிக்க முடியாது.

274. அம்மான் வீட்டுத் தோட்டத்திலே,
        பட்டாக்கத்தி தொங்குது.

275. அண்ணன் மத்தளம் கொட்ட,
        தங்கை விளக்குக் காட்ட,
        அம்மா தண்ணிர் தெளிக்கிறாள்.

276. காலையில் கூவும் பட்சி;
        கந்தன் கொடியில் காணும் பட்சி;
        குப்பையைக் கிளறும் பட்சி;
        கொண்டையை ஆட்டும் பட்சி.

277. இரவும் பகலும் ஒய்வில்லை;
        அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை.

278. இந்த ஊரிலே அடிபட்டவன்;
        அடுத்த ஊரிலே போய்ச் சொல்கிறான்.

279. எங்கள் ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே
        ஐந்து வாழை மரங்கள் - அவைகளை
        ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது.

280. ஒரு முழ மூங்கிலில் ஒய்யார கீதம்.

281. மொட்டைத் தாத்தா தலையிலே
        இரட்டைப் பிளவு.

282. பச்சைப் பாம்பு கல்லைத் தூக்குது.

283. நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு
        நீண்ட நாள் வாழ்வு.

284. வெள்ளை வயலிலே கறுப்புவிதை.
        கண்ணால் பார்த்தேன்; கையால் எடுக்க முடியவில்லை.