பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

336. ஒளி கொடுக்கும்; விளக்கு அல்ல.
        சூடு கொடுக்கும்; நெருப்பு அல்ல.
        பள பளக்கும்; தங்கம் அல்ல.

337. காலையில் தோன்றும் அது,
        கண்ணாடி போல் பளபளக்கும்,
        பச்சைப் புல்லில் படுத்திருக்கும்.
        முத்துப் போல உருண்டிருக்கும்.

338. வெள்ளை மாடு வாலால் நீர் குடிக்குது.

339. கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை.

340. வளைக்க முடியும்; ஒடிக்க முடியாது.

341. காதைத் திருகினல் கதை எல்லாம் சொல்லுவான்.

342. ஒடையில் ஓடாத நீர்;
        ஒருவரும் குடிக்காத நீர்.

343. நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன்.
        நெருப்பைத் தின்பான்; நீரும் குடிப்பான்.

344. தலையைச் சீவிச் சீவி விட்டால்,
        தாள் மீது நடப்பான்.

345. எங்கள் வீட்டுக் கிணற்றிலே,
        வெள்ளிக் கிண்ணம் மிதக்குது.

346. ஒளி தந்த உத்தமன்,
        உருக்குலைவான் அதனாலே.

347. தண்டைச் சலங்கைக்காரி;
        தலைவாசல் வீட்டுக்காரி;
        அவளைத் தொடுவானேன்?
        கவலைப்படுவானேன்?

348. கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.
        பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.
        பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.
        விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன்.