பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

349. தண்ணிரில் நீந்திவரும் - அது
        தரையிலே தாண்டி வரும்.

350. பாத்தி சிறு பாத்தி;
        பாய்வது கரு நீர்.
        வேரோ வெள்ளை வேர்.
        பூவோ செம்பூ.

351. கண்ணுண்டு; செவியில்லை.
        கண்டிடும்; கேட்டிடும்.

352. முத்து முத்துத் தோரணம்,
        தரையில் விழுந்து ஓடுது.

353. பார்ப்பதற்கு ஐந்து கால்;
        எண்ணுவதற்கு நான்கு கால்.

354. பார்த்தால் பார்க்கும்; சிரித்தால் சிரிக்கும்;
        குத்திப் பார்த்தால், பத்துச் சில்லாம்.

355. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல.
        பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்ல.

356. நூல் இல்லை; ஊசி உண்டு;
        வாயில்லை; பாட்டுப்பாடும

357. இரவில் சுமந்திடுவான்; பகலில் சுருண்டிடுவான்.

358. ஒரே புட்டியில் இரண்டு தைலம்.

359. ஒரு கிணற்றில் ஒரே தவளை.

360. டாக்டர் வந்தார்; ஊசி போட்டார்;
        காசு வாங்காமல் செருப்படி வாங்கினார்.

361. வட்டக் குளத்திலே மீன்வந்து மேயுது.
        ஈட்டியாலே குத்தி எடுத்து வாயில் போடுடா,

362. அண்ணன் தம்பி இரண்டு பேர்;
        அவர்களைத் தொடுவது பன்னிரண்டு பேர்.