பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

403. முயல் புகாத காடு என்ன காடு?

404. ஒளியில் தொடர்வான்;
        இருளில் மறைவான்.

405. தலை போனால் மறைக்கும்;
        இடை போனால் குரைக்கும்;
        கால் போனால் குதிக்கும்;
        மூன்றும் ஒன்று சேர்ந்தால்
        முந்தி ஓட்டம் பிடிக்கும்.

406. அனலிலே பிறப்பாள்,
        ஆகாயத்தில் பறப்பாள்.

407. கன்னங்கரிய அரங்கத்தில்
        வெள்ளைப்பந்து விளையாடும்.

408. கல்லும் கரடும்,
        முள்ளும் முரடும்,
        வேரும் விறகும்.

409. ஈரேழு பதினுலு இறகு மயிலாட,
        முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
        வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?

410. தேர் ஒடுகிறது; பூ உதிருகிறது.