பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



16. அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு
      அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி

17. வாலைப் பிடித்தால் வாயைப் பிளப்பான்;
      நெருப்பை விழுங்குவான்; விழுங்கிக் கக்குவான்.

18. வட்ட வட்டப் பாய்;
      வாழ்வு தரும் பாய்;
      ஊரெல்லாம் சுற்றும் பாய்,
      ஒவ்வொருவரும் விரும்பும் பாய்.

19. நிலத்திலே முளைக்காத புல்-அது
      நிமிர்ந்து நிற்காத புல்.

20. கண் சிமிட்டும் ஒன்று:
      மணி அடிக்கும் மற்றொன்று:
      கண்ணிர் வடிக்கும் இன்னொன்று.

21. கண் இல்லாத நான்,
      பார்வையிழந்தவர்க்குப் பாதை காட்டுவேன்.

22. ஆள் இறங்காத கிணற்றிலே
      மரம் இறங்கிக் கூத்தாடுது.

23. அம்மாளோ சும்மா படுத்திருப்பாள்
      மகள் முன்னும் பின்னும் ஒடிக்கொண்டிருப்பாள்.

24. சின்னப் பையனும் சின்னப் பெண்ணும்
      சேர்ந்து கட்டின மாலை - அதை
      சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச்
      சென்னைப் பட்டினம் பாதி.

25. கையிலே கர்ணம் போடும்
      கணக்குப் பிள்ளை யார்?

26. கால் உண்டு; நடக்க மாட்டான்.
      முதுகு உண்டு; வளைக்க மாட்டான்.
      கை உண்டு; மடக்க மாட்டான்.

27. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி
      ஊசலாடுது.

28. வண்ணான் வெளுக்காத வெள்ளை,
      குயவன் பண்ணாத பாண்டம்,
      மழை பெய்யாத தண்ணிர்.