பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

29. கள்ளனுக்குக் காவல்
      காற்றுக்குத் தோழன்.

30. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும்
      மாறி மாறி ஒடும்; பிடிக்க முடியாது.

31. காசியிலிருந்து கல்கத்தாவரை
      ஆடாமல் அசையாமல் போகிறது, அது என்ன?

32. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை
      மண மணக்கிRறார் வீட்டிலே.

33. பார்த்தால் கல்தான்;
      பல்பட்டால் தண்ணிர்தான்.

34. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்;
      வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.

35. அண்டை வீட்டில் குடியிருப்போம்
      அக்காள் தங்கை நாங்கள்;
      கிட்டகிட்ட இருந்தாலும்
      தொட்டுக் கொள்ள மாட்டோம்.

36. முகத்திலே காட்டுவான்;
      முதுகிலே காட்டமாட்டான்.

37. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை.

38. முன்னும் பின்னும் போவான் - ஆனால்,
      ஒற்றைக் காலில் நிற்பான்.

39. ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது.

40. முதுகெல்லாம் கூனல்; வயிறெல்லாம் பல்.

41. முள்ளு வேலியும் தாண்டி,
      மூங்கில் வேலியும் தாண்டி,
      உள்ளே சென்று பார்த்தால்
      ஒளிந்திருப்பான் சின்னப்பயல்.

42. கொக்கு நிற்க நிற்க;
      குளம் வற்ற வற்ற.

43. ஆலமரம் தூங்க,
      அவனியெல்லாம் தூங்க,
      சீரங்கம் துரங்க,
      திருபாற்கடல் தூங்க,
      ஒருவன் மட்டும் தூங்கவில்லை.