பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

60. பச்சைக் கதவு,
      வெள்ளை ஜன்னல்,
      கறுப்பு ராஜா.

61. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது.
      அது என்ன?

62. முதுகை அமுக்கினுல் மூச்சுவிடுவான்;
      பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவான்.

63. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி.
      பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.

64. ஏணிமேலே கோணி;
      கோணி மேலே குழாய்;
      குழாய் மேலே குண்டு;
      குண்டு மேலே புல்லு:
      புல்லு மேலே பூச்சி.

65. மொட்டைப் பாட்டிக்கு,
      முழுகத் தெரியாது.

66. ஐந்து அடுக்கு நாலு இடுக்கு.

67. கிணற்றைச் சுற்றிப் புல்.

68. சாண் உயரப் பையன்,
      வைத்ததெல்லாம் சுமப்பான்.

69. பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்.
      ஒன்று எரியுது, இன்னென்று புகையுது.

70. அக்கா சப்பாணி.
      தங்கை நாட்டியக்காரி.

71. அரைச் சாண் குள்ளனுக்குக்
      கால் சாண் தொப்பி.

72. உயிரில்லை; ஊருக்குப் போவான்.
      காலில்லை; வீட்டுக்கு வருவான்;
      வாயில்லை; வார்த்தைகள் சொல்வான்.

73. நிலத்தை நோக்கி வருவான்;
      நுரையைக் கக்கிச் செல்வான்.