பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 12 ஆனால் அந்தப் பகுதிகளில் எல்லாம் இப்போது விடுதலை வேட்கை கனிந்த நிலையிலும் அரும்பிய நிலையிலும் காணப்படுகின்றது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவிலே ஏகாதி பத்தியத்தின் முரட்டுப் பாதங்கள் படிந்திருந்த பூமி களில், அந்த அவமான அடையாளங்கள் கழுவப்பட வேண்டு மென்பதற்காக ரத்த அபிஷேகம் செய்யப் படுகின்ற காட்சிகள் தென்படுகின்றன. திருக்கும் விடுதலை வேட்கையின் அறிகுறி அது என்பது தெளிவாகவில்லையா? வளர்ந் இந்தக் கிளர்ச்சிகளின் எதிரொலி, அந்தந்த நாட்டு அரண்களோடு அடங்கிவிடவில்லை. அரண் களையும் துளைத்துக்கொண்டு வெகு தூரத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் சுதந்திர ஜூவாலை வீசியிருக் கிறது. அப்படி வீசிய காரணத்தால் எழுந்துள்ள தீப்பொறிகளின் எண்ணிக்கையை நினைத்தாலே நெஞ்சினிக்கும். கல்லறைகளாய்-காதலியை இழந்த வர்களாய் - கைம்பெண்களாய்-கண்மணியை இழந்த பெற்றோராய் -அனாதைகளாய் -அபலைகளாய் வீடற்ற வராய்-ஓடேந்திகளாய்-பலர் ஆக்கப்பட்டாலுங் கூட விடுதலைக் கிளர்ச்சி யென்னும் வளமான சொல்லை, நெஞ்சிலேந்தி யுத்தம் நடத்தும் நாடுகள் எல்லாம் தீயவர் வாழ்வைத் தீய்த்திடும் தீப்பொறிகள்தான். அதில் சந்தேகமில்லை; அணுவும் சந்தேகமில்லை.