பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 19 மு. கருணாநிதி ― ரஸ்புடீனின் பயங்கரத் தாடி அசைவை, முகத் திலே உதயமாகும் விகாரக் கீறல்களை, விழியிலே மின்னும் கோரத்தை, விலை மதிக்க முடியாத வித்த கரின் உபதேசமென எண்ணிய ஜார் மன்னனை, அவனுடைய அதிகாரப் புயலை-சர்வாதிகார சூறா வளியை - அவன் வால்பிடித்த வஞ்சகர்களை மமதையாளரை-மாளிகை வாசிகளை - பிரபுக்களை -பிற்போக்கு சக்திகளை சுக்கல் சுக்கலாக தகர்த் தெறிந்த ரஷ்ய மக்களின் விடுதலைக் கிளர்ச்சி உலக அரங்கிலே பேசப்படாத நேரம் கிடையாது. முத லாளி மூர்ச்சையாகிறான்; மூர்க்கன் முதுகு காட்டு கிறான்; முட்டாளும் தலை நிமிர்கிறான்; கோழையும் கொக்கரிக்கிறான் ரஷ்யப் புரட்சியின் கதையைக் கேட்டால். - ரஷ்யாவிலே அக்டோபர் புரட்சிக்குப் பின்னும் முதல் உலகப்போர் முடிவுற்ற பிறகும் சீனாவிலே எழுச்சிக் கதிர் படரலாயிற்று. பிரபுத்துவம், ஏகாதிபத்யம், ராணுவ வெறி, இவைகளையெல்லாம் எதிர்த்து அதிகார போதை தொழிலாளர் எழுந்தனர் சைனாவில். 1921-ம் ஆண்டில்தான் சைனாவிலே கம்யூனிஸ்டு கட்சி உதயமாயிற்று. முதலிலே அவர்களுக்கு கோமிண்டாங் கட்சியுடன் ஒரு ஐக்ய முன்னணி அமைப்பது தேவையாயிற்று. 1925-ல் இரண்டா