பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி ல 30 வெற்றிபெற்ற நாடுகளை வழிகாட்டியாகக் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியிலே வீழ்ந்துவிட்ட நாடானாலும் அதன் வீரத்தை நினைவூட்டி இங்கே விடுதலைக் கிளர்ச்சி நடந்துகொண்டுதானிருக்கிறது. இன்று இந்தோசீனா! நாளை இந்தோனேஷி மாறலாம்! யாவாக குமுறிவரும் அலைப் பெருக்கை மணல் வீட்டுச் சுவர்களால் தடுக்க நினைப்பது மழலைகளின் வேலை. விளையாட்டுச் செய்கை ! பெரியவர்களே அதில் ஈடுபட்டால் அப்போது மழலை வேலை என்பதல்ல அதற்கு பெயர்; மண் டூகங்களின் வேலையாகிவிடும். மணல் சுவர் அமைத்திடும் செயலிலே தான் பலர் இறங்கியிருக்கிறார்கள். "திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அல்ல; ஆகையால் திராவிடநாடு கூடாது! திராவிடம் எந்த நூலிலும், எங்கேயும் இல்லாத வார்த்தை; ஆகை யால் திராவிட நாடு கூடாது!' இப்படி ஒரு மறுப்பு கிளம்புகிறது; மணல் வீடு. போல! மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் கவிதை யிலே கம்பீரமாக நிற்கிறது, திராவிடம் என்ற தேன் சொல்.