பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

மு.கருணாநிதி லட்சக்கணக்கானவர் தனியரசில் வாழலாமாம்; பத்தாயிரம்பேர் தனியாக நாடுபெற்று வாழலாமாம் ஐந்து கோடி பேர் அனாதைகளாய் ஆகவேண்டுமாம். அதுமட்டுமல்ல; 999 சதுர மைல் பரப்புள்ளதும் இரண்டு லட்சம் மக்களைக்கொண்டதுமான லக்சம்பர்க் தனியாக வாழுகிறது. இன்னுமொரு வேடிக்கை காணுகிறோம், நாலு சதுர மைல் பரப்புள்ள மொனாகோ, இருபதாயிரம்பேர் கொண்டநாடு தனியாகத்தான் இருக்கிறது, மத்ய தரைக் கடல் ஓரத்திலே! வேடிக்கையினும் பெரிய வேடிக்கை; ஆயிரம் மக்களைக்கொண்ட (இத்தாலி) வாடிகன் சிட்டி போப் பின் ஆட்சியிலே தனித்து வாழ்கிறது. நாம் ஐந்து கோடிக்கு மேற்பட்டவர் வாழக்கூடாதாம். வடநாட் டின் கூலியாக இருக்கவேண்டுமாம். இரண்டாயிரம் ஆண்டுகள் உலகத்திலே தங்கிட இடமின்றி நாடோடிகளாய்த் திரிந்த யூதர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்திருக்கிறது. 1914 முதல் 18 வரை யிலே நடந்த யுத்தத்தின்போது பால்பர் பிரகடனத்தின் பேரில் பாலஸ்தீனத்தில் குடியேற ஆரம்பித்து, பிறகு ஹிட்லரால் விரட்டப்பட்டவர்களும் ஓடிவந்து கடைசியாக 1948-ல் பாலஸ்தீனிலேயே இஸ்ரேல் என்ற தனி நாட்டை பெற்று விட்டனர். நாடோடி