பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 34 களாய்த் திரிந்தவர்களுக்கு ஒரு நாடு; நாடாண்டவர் களுக்கு நாடோடியினும் கீழான நிலை! மீன் பிடிப்பதையும், ஆடு வளர்ப்பதையு தொழிலாகக் கொண்டுள்ள ஐலைந்து தனிக் குடியரசு அமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நெல் களஞ்சியமான திராவிடம், எகிப்து நாட்டு வீதிகளிலே முத்தின் ஒளி பரப்பிய திராவிடம், மிளகு உற்பத்தி செய்யும் திராவிடம், தங்கம் தரும் திராவிடம், ரப்பர் வழங்கும் திராவிடம், சந்தனக் காடுகளின் மணம் பரப் பும் திராவிடம், கடற்கரையில் சங்குகளை வாரியிறைக் கும் திராவிடம், ஐநூறு மைல் நீளமுள்ள காவேரியும், 1750 மைல் நீளமுள்ள கடற்கரையையும் பெற்றுள்ள திராவிடம், பம்பாய்க்கு அடுத்தபடியாக மின்சாரவசதி படைத்த திராவிடம், ஐம்பது கோடி டன் நிலக்கரியை கடலூர் விருத்தாசலம் பகுதியில் பூமிக்குள்ளே வைத்திருக் கிற திராவிடம், முப்பது கோடி டன் இரும்பை சேலம், திருச்சி மாவட்டங்களில் வைத்து பூட்டியிருக்கிற திராவிடம், இருப்பைப் பிரிக்கும் குரோமைட், சுண்ணாம் புக்கல், இவைகளை அங்கேயே பெற்றிருக்கிற திராவிடம், விசாகையிலே, மாங்கனீசம் உண்டென்று கூறும் திராவிடம், அப்ரகம் அளிக்கும் சேலம், நீலகிரி, கோவை, மலையாளம் ஆகியவைகளை அணைத்திருக் கும் திராவிடம்,