பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 42 நான் ஊகிக்கிறேன் நண்பர்களே, தமிழ் அக ராதியிலேயே ஒரு மாற்றம் ஏற்படுமென்று! துரோகி என்றால் தூய்மையாவன் என்று பொருள் சொல்லப் போகிறது, வருங்கால அகராதி. வெண் புறாவைப் பார்த்து வல்லூறு வல்லூறு என்று வர்ணித்துக் ஆண்டுகளுக்குப் பிறகு, கொண்டிருந்தால் சில பல வல்லூறு என்றால் வெண்புறா என்றுதான் ஆகிவிடும். தென்றலை - புயல் புயல் என்று அழைத்துக் கொண்டே யிருந்தால் புயலுக்கு தென்றல் என்றே அர்த்தம்கூற ஆரம்பித்துவிடும், வருங்கால அகராதி! ஏசல்களை-ஏளனங்களை-கிண்டல்களை - கேலி களை - கண்டனங்களை தாங்கிக்கொண்டு விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறவர்கள் நாம்! துரோகி யென்றால் அதை நம் வீர விருதாகக் கொண்டு- பாபி என்றால் பதக்கமாக நினைத்து பணிபுரிந்து வருகிறோம்; கிளர்ச்சி நடத்தி வரு கிறோம். கிளர்ச்சியாளர்களின் குரலை அலட்சியப்படுத்து வதோடு நில்லாமல் மனதைக் கிள்ளிவிடும் போக்