பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மு.கருணாநிதி இத்தகைய பரந்த எண்ணம்-நல்ல பண்பு- புதுமை வெறுப்பாளர்களிடமும் தோன்றவேண்டு மென்பதுதான் நமது ஆசை. சேக்கிழரை, கம்பனை சினந்திடுகிற நாம் சிலப்பதிகாரத்தை சிறப்பித்திடத் தவறுவதில்லை. புறத்தை, அகத்தை புகழ்ந்திட மறந்ததில்லை. பழமையிடத்திலே பாசம் செலுத்தித்தான் தீர வேண்டுமென்பதற்காக அல்ல ; அந்த பழைய நூல் கள் தாயின் உள்ளத்தை பெற்றிருக்கிற காரணத் தால் பாராட்டுகிறோம். P இந்தத் தெளிவான உண்மையை புரிந்து கொள்ள இயலாதவர்கள் - வேறு நாடுபளிலே இந் தப் புதுமை கிளர்ச்சி, வெகு சுலபமாக வெற்றி பெற்று வருவதையும் மறந்து ஏதோ ஒரு ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி அலறித் துடிக்கிறார்கள். படித்தவர், பட்டம் பெற்றோர், உலகம் சுற்றிய வர் அறிஞரெனப் புகழ் பெற்றவர். இவர்களிலே பெரும்பாலனவர் ராகு, குளிகை காலங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்! பஜனை மடம் சுற்றிகள்! பகவானின் பல்லக்கு தூக்கிகள்!