பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 50 இவர்களை யெல்லாம் அறியாமையிலிருந்து விடு தலை பெறச் செய்து, நம்முடைய விடுதலைக் கிளர்ச்சி யிலே இனைக்க வேண்டிய பணியையும் மேற்கொண் டிருக்கிறோம். பசி கொண்ட பல்லியின் சப்தத்திலிருந்து, பக் தர்களின் ஆவேசக் கூச்சல் வரையிலே - பார்த்து நடு நடுங்கிடும் பாமரர் ஏராளம் இங்கே! - அவர்களையெல்லாம் மௌடீகத் தனத்திலிருந்து விடுதலை பெறச் செய்ய போராடி வருகிறோம் நாம். விஷமப் பிரசாரம் என்ற எதிரிகளின் அனு குண்டு வீச்சுக்களை யெல்லாம் துச்சமாகக் கருதி, தொடர்ந்து நடத்துகிறோம் இந்தப் பகுத்தறிவுப் பணியையும். - விவசாயத்திலே ஈடுபட்டவன் வயலுக்கு வேலி போடுவதைமட்டும் முக்கியமாகக் கருதி, கழனியிலே முளைக்கும் களையை எடுக்காமல் விட்டு விட்டால் வேலி பலமாக அமையும் விளைவு சுகமாக இருக் காது! ஆடுமாடு நுழையாது ஆனால் அறுவடை ஆனந்தமா யிருக்காது! - இதை எண்ணித்தான் சமுதாயப் பயிர் செழிப் பாக வளர, அறியாமைக் களை களை அகற்றி, அதே நேரத்தில் தனியரசு வேலிபோடும் வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.