பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 54 ஆயுதங்களின் பலத்தை உணர்ந்தபோதும் அதன் அவசியத்தையும் தேவையையும் ஒத்திப் போடும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறது. பின்பற்றுவோறின் எண்ணிக்கை அதிகம் இருக்கத் தேவையில்லை ; பின்பற்றும் கொள்கை யின் பலமும், சிலர் பின்பற்றினாலும் அந்தச் சில ரின் உடும்புப் பிடிப்பும்தான் இப்போதைய விடு தலைத் தலைவர்களின் வெற்றிக்கு மருந்து. இரத்தப் புரட்சியையும் ஆயுத பலத்தையும் பக்குவமறியாத மக்களின் முதிர்ச்சி பெறாத முடிவு என்று தீர்மானித்திருக்கும் இந்தக் காலத்திலும், சீனத்தின் விடுதலைக்கு துப்பாக்கியும் பீரங்கியும் தேவைப்பட்டிருக்கிறது. இந்தோ சீனாவிலே இப் போது போர்க்களம் உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இவைகள் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும், தவிர்க்கமுடியாத தாகிவிட்ட நிலைமை யென்றும் சமாதானம் கூறப்பட்டாலும் இம்முறைதான் சரி யானது என்று ஒப்புக்கொள்ள முடியாது. ஆதிக்க சக்திகளின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது மக்கள் சக்திகளின் பக்கம் ரஷ்யா நிற்கிறது - ஆகவேதான் அழுத்தப்படும் சக்தியும் அமுத்தும் சக்தியும் ஆயுத மேந்திப் போரிடுகின்றன என்று விளக்கங்கள் வராமலில்லை. காரணங்கள் எத்தனை கூறப்பட்டா லும் வளர்ந்துவரும் நாகரீக உலகம் அத்தகைய -