பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 மு.கருணாநிதி டவன் பெயரால், அவன் அவதார மகிமைகளின் பெயரால் அல்லவா அது மக்கள் மன்றத்திலே கொலுவீற்றிருக்கிறது. விடுதலைத்தீயைப் பரப்பிட மேடை ஏறினால் அங்கேயும் இரட்டிப்பு வேலைதான். "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று தான் மேடைகள் முழங்கியிருக் கின்றன. வ வாழ்வைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்ற போதனைக்குள்ளானவர்களை வாழ்வின் உண்மை உருவத்தைக் காணச் செய்து, அதன்பிறகு அந்த வாழ்வுக்கு வேண்டிய உரிமைப் போராட்டத்திலே இழுத்துவர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி யிலே முக்கால் வெற்றியாவது பெற்றிருக்கிறார்கள் விடுதலை வீரர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏடுகள் மூலம் எழுச்சி யேற்படுத்துவது விடு தலைப் படையின் முக்கியமான வேலை. அந்த வேலைக்கு இங்கே எத்தனை தடைகள். இங்கிருப் போர் படித்ததெல்லாம் நெப்போலியனும், சேரன் செங்குட்டுவனும் அல்வவே. நெற்றிக்கண் காட்டும் பரமசிவனும், மாயா ஜாலக் கண்ணபிரானும் தானே!