பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி விடுதலைக் கிளர்ச்சி! தலைப்பிலேயே எவ்வளவு எழுச்சி. வீரர்களுக்கு துடிதுடிப்பையும் விவேகிகட்கு தித்திப்பையும் வழங்கிடும் உணர்ச்சிச் சொற்களின் கூட்டு, ஒலிக்கும்போதே புது விறுவிறுப்பை வாரி யிறைக்கிறது. விடுதலைக் கிளர்ச்சி வெறும் எழுத் தாரமல்ல; அந்த சொல்லுக்காக அர்ப்பணிக்கப்பட் டிருக்கிற உயிர்களின் எண்ணிக்கை லடங்கா! அறுத்துத் தரப்பட்டிருக்கிற குவியல் அளவில் மிகப் பெரியது! நொறுக்கப்பட் டிருக்கிற எலும்புகளின் தொகை ஏராளம்! கணக்கி நரம்புக் ரத்தச் சகதியிலே விதைக்கப்பட்ட பிணங்கள் தந்த இன்ப அறுவடைதான் விடுதலை! அதற்காக செய்யப்பட்ட உழவு முயற்சி தான் கிளர்ச்சி ! ப கிளர்ச்சியின்றி விடுதலை கிடைத்தது கிடை யாது பெரும்பாலும்; எங்கேயும்; எப்போதுமே ! நாட்டிலே-வீட்டிலே--நடைமுறைகளிலே விடு தலைக்காக கிளர்ச்சிகள் மலர்ந்திருக்கின்றன. நெருப் பிலே விழுந்த புழு, செத்துவிடுவோமென். று தெரிந்