பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

85

கும்பெனியார் பறிமுதல் செய்து தமதுடமையாக்கிக் கொண்டனர்.[1] எதிர்பாராத வகையில் இடர்ப்பாடுற்ற முகவை மன்னர் என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தார். அவர்களைப் பயமுறுத்துவதற்காக பீரங்கி வண்டிகளும், வெடிமருந்து பொதிகளும், இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கும்பெனியார்களது ஒற்றர்களான மார்ட்டின்ஸாம், பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர். அந்த பகல் கொள்ளையை, அவர்களது நாகரீகமான சொற்களில், மன்னரது சொந்த கருவூலத்திலிருந்து 'புதையல்களை' கண்டுபிடித்து சர்க்கார் கணக்கில் சேர்த்து விட்டதாக கலெக்டாது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பகல் கொள்ளையில் நூற்றி இருபது சாக்குப் பைகளில் இருந்த 50,455 சூழிச்சக்கரம் பணத்தையும், அந்தப்புரத்திலிருந்த அரசரது பெண்டுகளிடமிருந்து பத்து சாக்குப் பைகளிலிருந்த 10,000-ம் ஸ்டார் பக்கோடா பணத்தையும், 41 பைகளில் வைத்திருந்த 20,475 சூழிச்சக்கரம் பணத்தையும் கைப்பற்றினர்.[2] மற்றும் சேதுபதி மன்னரது கருவூலக் கணக்குகளையெல்லாம் பரிசீலித்த பிறகு, 58,751.14.0 ஸ்டார் பக்கோடா பணத்தைக் கைப்பற்றி இருப்பதாகவும், மேலும் 99,945.15.70 ஸ்டார் பக்கோடா பணத்திற்கு விபரம் தேவைப்படுவதாகவும், இதில் மன்னர் நவரத்தினங்கள் வாங்குவதற்காக காயல்பட்டினம் மரைக்காயரிடம் கொடுத்திருந்த 44,165.87.49 ஸ்டார் பக்கோடாக்களும், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது அவர் எடுத்துச் சென்ற 6,041.15.0 ஸ்டார் பக்கோடாக்களும், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது அவர் எடுத்துச் சென்ற 6.04.1.15.0 ஸ்டார் பக்கோடாக்களும் ஆக 50,206.0.0.0 ஸ்டார் பக்கோடாக்களை நீக்கி எஞ்சிய தொகையை-அல்லது 'புதையலை' (அவர்களது கருத்துப்படி) கைப்பற்ற பெரு


  1. Madurai Dist. Records, Vol. 1133, 4-9-1801
  2. Revenue Consultations, Vol. 62 A, 13-3-1795, р. 964