பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

91

பவர்கள், சிற்றுண்டி பரிமாறும் வெயிட்டர்கள், சோக்தார்கள், கித்வால், தானாபதி, பூந்தோட்டத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரர்கள், தங்கள் உடல் வலிமையைக் காட்டி மகிழ்விக்கும் மொலகு செட்டி என்ற மல்லர்கள், சிந்திகள், சிலம்பக்காரர்கள், பாடகர்கள், நட்டுவர்கள், இன்னும் கூடார லஸ்கர், சேரியட், பீட்டன், தட்டுவண்டி சாரதிகள், பல்லக்குத் துக்கிகள் பெண் பணியாளர்கள், அலிகள், சமையல்காரர், மசால்ஜிகள் தையல்காரர், மருத்துவர், குயவர், தச்சர், பாராக்காரர்கள், இரவு பாரி வலம் வருபவர்கள், ஒப்பனைக்காரர்கள், குதிரை, யானை, ஒட்டகை பாகர்கள், காவல்காரர்கள் என பல வகையான பணியாளர்கள் அரசரது வாய் அசைவிற்கும், கண் இமைப்பிற்கும் காத்து நிற்கும் காட்சி. ஆனால் இங்கே தம்மைத் துாரத்திலிருந்து வெறித்துப் பார்க்கும் பரங்கி சிப்பாய்களை மட்டும் பகல் முழுவதும் சேதுபதி மன்னர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது. உறவையும், உரிமைச் சுற்றத்தையும் நீங்கி தமது இலட்சியம் எட்டப்படாத நிலையில், வாழ்நாளெல்லாம், சிறைக் கைதியாக வாழ வேண்டிய சிறுமையை எண்ணி அவரது இதயம் ஏங்கியது. இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

O O O O O

இராமநாதபுரம் அரண்மனையில், அரச குடும்பத்தினரும், பெண்டுகளும் வசிக்கும் தனிமைப் பகுதிக்கு (அந்தப்புரம்) தளபதி மார்ட்டின்சும், கலெக்டர் பவுனியும் சென்றது. அவர்களின் அணிகலன்களையும், பணத்தையும் பறித்துச் சென்றிருப்பது,[1] தம்முடைய சகோதரி மங்களேஸ்வரி நாச்சியார் இராமனாதபுரம் பட்டத்திற்கு வர தீவிரமாக முயற்சி செய்து வருவது,[2] தமது முந்தையப் பிரதானி முத்து இருளப்ப பிள்ளையை இராமனாதபுரம் சீமையின் பேஷ்காரராக கும்பெனியார் நியமனம் செய்திருப்பது,Revenue consultations, Vol. 62, 25-3-1795,

pp. 1060-61 ஆகிய செய்திகள் அடுத்து அடுத்து அவரது காதுகளில் நாராசம் போல் துளைத்


  1. Revenue consultations, Vol. 62, 15-3-1795. pp. 1275-76
  2. Revenue consultations, Vol. 61, 18-2–1795, pp. 452-59