பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

எஸ். எம். கமால்

கையை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து நான் அனுபவித்து வருகின்ற இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து இராமநாதபுரம் மன்னர் அனுப்பிய இன்னொரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்.[1] "...பெறுபவர் இராமநாதபுரம் பாளையக்காரர், இராமலிங்கம்' என தவறுதலாக கடிதத்தின் துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, எனது மூதாதையர்களை பாண்டிய மன்னர்களோ வேறு வேந்தர்களோ, நாயக்க அரசர்களோ, அல்லது வாலாஜா நவாபோ ஏன்? தங்களது கும்பெனி கவர்னர்களோ இவ்விதம் நாகரீகமற்ற முறையில் குறிப்பிட்டது கிடையாது. தாங்கள் கும்பெனி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூட இவ்விதம் தவறாகவோ அல்லது அநாகரீகமாகவோ குறிப்பிட்டது கிடையாது. தங்களது ரெவின்யூ துறையைச் சேர்ந்த வெப் என்பவர், ஒரு பணியாளுக்கு எழுதும் பாணியில் அந்தக் கடிதத்தை எனக்கு வரைந்துள்ளார். இவ்விதம் எழுதுவதற்கு நீங்களும் அனுமதி வழங்கியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதனால்தான் இதனைத் தங்களுடைய கவனத் திற்குக் கொண்டு வந்துள்ளேன். ஏற்கனவே எனக்கு எழுதப் பட்டுள்ள கடிதங்களையும் இப்பொழுது எழுதப்பட்டிருப்பதையும், தங்களது மொழி பெயர்ப்பாளர் அலுவலகத்திலிருந்து வரவழைத்து பரீசீலித்தால், இந்த விபரம் புலப்படும்.

என்மீதான சில புகார்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தன. அவைகளுக்கான மறுப்பையும் கீழ்க்கண்டவாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாவது : எனது குடிகளிடம் கடுமையாகவும் கொடுரமாகவும் நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

பதில் : எனது நாட்டின் நேரடியான நிர்வாகத்தில் கடந்த

மூன்று ஆண்டுகளாக இருந்து வந்துள்ளேன். எப்பொழுதும் யாரிடத்தும் நான் கடுமையாக நடந்துகொண்டது கிடையாது.


  1. Revenue consultations, Vol. 63 B, 21-4-1795, pp. 1868-78