பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

109

மான பல்லாயிரக்கணக்கான பணத்தை விழுங்கிவிட்ட முன்னாள் பிரதானி முத்திருளப்பபிள்ளையை சீமைக்கனுப்பி, நேர் செய்து கொடுக்க வலியுறுத்துமாறு கும்பெனியாரை கேட்டு அலுத்துப்போன நிலையில், மீண்டும் அவரையே இராமநாதபுரம் பேஷக்காரராக நியமனம் செய்திருப்பது ஆகிய செய்திகள்[1] சேதுபதி மன்னருக்கு பலவிதத்திலும் அதிர்ச்சியை அளித்தன. மறவர் சீமையைச் சூழ்ந்துள்ள இந்தச் சோதனையை எவ்விதம் நீக்குவது? அவற்றிற்கான வழிவகைகள் எவை? என்ற வினாக்கள் சேதுபதி மன்னரது சிந்தனையில் அடிக்கடி சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.


  1. Revenue consultations, Vol. 62, 25-2-1795, pp. 1060-62