பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

119

புகுந்து பயங்கரமான அட்டுழியங்களை நடத்தினர்.[1] நாகலாபுரம், எட்டையாபுரம் பாளையக்காரர்களும், இந்தக் கிளர்ச்சியில் பங்கு கொண்டனர் என்பதை தளபதி டிக்போரினது கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. நாகலாபுரம், பாளையக்காரரது தம்பி சின்ன நாயக்கன், முன்னுாறு வீரருடன் பள்ளி மடம் பகுதிக்குள் நுழைந்து அருப்புக்கோட்டையைக் கொள்ளையிட்டார். அவரிடம் இருந்த ஜிங்கால் என்ற பீரங்கியின் தாக்குதல் பலமான சேதத்தை ஏற்படுத்தியது.[2] சாத்துார் பாளையக்காரரது சிப்பந்தி வீரர்கள் சாத்துார் தாசில்தாரைத் தாக்கினர்.[3] பாஞ்சை, நாகலாபுரம், வீரர்கள் சிவகிரியிலிருந்து இராமனாதபுரம் கோட்டைக்கு சென்று கொண்டிருந்த கிஸ்திப் பண வண்டி பாதுகாப்பு அணியைத் தாக்கி, சர்க்கார் பணப்பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சித்தனர்.[4] மறவர் சீமையின் தெற்குப் பகுதியின் நிலைமை இவ்விதம் மிகுந்த சீர்கேடு அடைந்திருந்தது.

அங்குள்ள கும்பெனியாருக்கு எவ்விதம் உதவி அனுப்புவது என்பது புரியாமல், கலெக்டர் லூவிங்டன் தவித்துக் கொண்டிருந்தார். அனுப்பப்படும் வெடிமருந்து பொதிகளும் ஆயுதங்களும், கிளர்ச்சிக்காரர்கள் கையில் கிடைத்து விட்டால் எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் சேர்ந்தது போலல்லவா ஆகிவிடும்? கிளர்ச்சிக்காரர்கள் கை ஓங்கியிருந்தது. இதனைச் சமாளிக்க சிவகெங்கையிலிருந்து மருது சகோதரர்களின் வீரர்களை வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் கலெக்டர் பயன்படுத்தினார். மேலும், கூடுதலாக உதவி தேவைப்பட்டதால், இராணுவ அணி ஒன்றையும், நூறு குதிரை வீரர்களையும் அனுப்பி வைக்குமாறு கலெக்டர் மேலிடத்திற்கு அவசர அறிக்கை அனுப்பி வைத்தார்.[5] இதற்கிடையில் கிளர்ச்சிக்


  1. Ibid., Vol. 1122, 11–5–1799
  2. Revenue consultations, Vol. 95 A, 9–5–1799 and 16-5-1799, pp. 998-1014
  3. Madurai Collectorate, Vol. 1122, 22-5-1799
  4. Ibid., 25–5–1799
  5. Revenue consultations, Vol. 95 A. 20-5-1799, pp. 1998