பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

7

ராமேசுவரம் சாலையில் உள்ள வேதானை கிராமத்தில் கோட்டையையும், அகழியையும் அமைத்து இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்திய போர்த்துக்கீஸிய பரங்கியரை விரட்டியடிக்க சேதுபதி ஒருவர் மதுரையில் ஆளுநரான விசுவநாதநாயக்கரிடம் இராணுவ உதவி பெற்றதாலும்[1] கீழைக் கடற்கரைப் பகுதியில் சேதுபதிகள், பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் நிலைத்திருந்த விவரம் அறிய முடிகிறது. ஆனால் கி.பி. 1605 முதல் இராமநாதபுரம் மன்னர்களைப் பற்றிய தெளிவான செய்திகள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் போர்த்துக்கீஸியரின் நடமாட்டமும் ஆதிக்கமும் அதிகரித்து வந்தன. அப்பொழுது அவர்களைச் சமாளிக்க மதுரை நாயக்க மன்னரிடம் கடற்படை எதுவும் இல்லை. அத்துடன் அவர்களை கடற்கரைப் பகுதியில் பொருதி அழிப்பதற்குத் தகுந்த தரைப்படையும் அவர்களிடம் இல்லை. இந்த அவல நிலையைச் சமாளித்து தமக்கு உதவுவதற்காக கி.பி. 1605-ல் மதுரை மன்னரான முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் புகலூரில் இருந்த முதலாவது சடைக்கன் சேதுபதியை அந்தப் பகுதியின் மன்னராக அங்கீகரித்து, அரசு மரியாதைகளை அளித்தார்.[2] அது முதல் சேது மன்னர்கள் மதுரை நாயக்கர்களது மேலாதிக்கத்தை மதித்து ஏற்றுக்கொண்டவர்களாக இருந்து வந்தனர். இதனால் அவர் களுக்கு தளவாய்[3] என்ற சிறப்புப் பெயரும் இருந்துவந்தது. திருமலை மன்னரது ஆட்சித் துவக்கத்தின்பொழுது தோன்றிய பிணக்குகளின் காரணமாக, நாயக்கரது பெரும் படை சேதுபதி சீமையில் கி.பி. 1639-ல் நுழைந்தது. பல போர்களுக்குப் பிறகு இராமேசுவரம் போர்க்களத்தில் தோல்வியுற்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டார். தொடர்ந்த குழப்பங்களைச் சமாளிக்க முடியாத திருமலை மன்னர் சேதுபதியை


  1. Fr. Heras, Aravidu Dynasty p 1 56
  2. Taylor, Old Historical Manuscripts, Vol. II
  3. தளவாய் தளபதி பதவியை ஒத்த அரசுப் பணி, தெலுங்கு மொழிச் சொல்.