பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

55


(கி. பி. 1792) ஆற்காட்டு நவாப் கும்பெனியாரிடம் மறவர் சீமை நிர்வாகத்தை மூன்று வருடகாலத்திற்கு மாற்றிக்கொடுத்தது பல வழிகளிலும் இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கின. என்றாலும், இராமனாதபுரம் சேதுபதி மன்னரது இலட்சியம்-மறவர் சீமையை ஒன்றுபடுத்துவது. அந்நிய ஆதிக்கத்தை தமது மண்ணிலிருந்து அடியோடு அகற்றுவது-அந்த இலட்சியப் பாதை அவரது பார்வையில் தெளிவாகத் தோற்றமளித்தது! எத்தகைய எதிர்ப்புகள் இடைப்பட்டால் என்ன? அவைகளை எதிர்த்து தூசாகத் துாற்றிவிடக் கூடிய துணிவு இருக்கும் பொழுது!

நீண்ட நெடுங்காலமாக திருநெல்வேலிக்கும், சோழ வள நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதை மறவர் சீமை வழியாகச் சென்றது. இராமனாதபுரம் சீமையின் எல்லையிலுள்ள திருச்சுழியலில் தொடங்கி பட்ட நல்லூர் வழியாக சிவகங்கைச் சீமைக்குள் சென்று, தொண்டித் துறையைத் தொட்டு, தஞ்சை சேருவது இப்பாதை. ஏற்கெனவே சிவகங்கைச் சிமையிலிருந்து இராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான திருவாடானை வழியாக தொண்டித் துறைமுகத்துக்குச் சென்ற சாயர் (அவுரி) பொதிகள் மீது விதிக்கப்பட்ட சுங்கம் ரூபாய் பதினாராயிரத்தை இராமநாதபுரம் அரசுக்கு சிவகங்கைச் சேர்வைக்காரர் செலுத்த மறுத்த[1] சிவகங்கை ஆட்சியாளர்மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, இந்தப் போக்குவரத்துப் பாதையில், சேதுபதி மன்னர் மாற்றங்களை ஏற்படுத்தினார். இந்த மாற்று வழியினால், பட்டநல்லூர் சுங்கச்சாவடி மூலம் கிடைத்த வருமானம் சிவகங்கை அரசுக்கு கிடைக்காது போயிற்று. மன்னரது இந்த எதிர்ப்பு நடவடிக்கையை சிவகங்கைப் பிரதானிகள் கிழக்கிந்தியக் கும்பெனியாரிடம் புகார் செய்தனர். மேலும் ஆற்காட்டு நவாப்பின் கவனத்திற்கும் இந்த நடவடிக்கை பற்றி அறிக்கை அனுப்பினர். ஆனால் எத்தகைய பலனும் இல்லாத தாஸ், பொறுமையிழந்த சிவகங்கைப் பிரதானிகள் பலர் எதிர் நடவடிக்கையில் இறங்கினர்.[2]


  1. Military Country Correspondence, Vol. 45 (1794), pp. 10 1, 104
  2. political dospatches to England. Vol. III (1794) pp. 816-18