பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

43

கக் கூடியனவல்ல. திராவிட இனவளம் வரலாற்று உண்மை. மாவீரர்கள், மதிவாணர்களை ஈன்றெடுத்த இனம். சிறந்த வாணிகர்கள், சிற்பிகள், கவிகள், இசைவாணர்கள் இருந்தனர். தன்னாட்சியிலே தழைத்த மலர்கள், திராவிட நாட்டிலே நறுமணத்தைப் பரப்பின.


"புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவு
      பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
 கனிமொழி பேசி இல்லறம் நாடும்
      காதல்மாதர் மகிழுறும் நாடு"

என்று நமது கவிஞர் கூறினது கவிதை எழில் மட்டுமல்ல; உண்மை.

முன்னாளில், இங்குத் தன்னாட்சியும் தக்கோர் ஆட்சியும் இருந்ததால், இன்பவாழ்வு இருந்தது. பொன்சிகரமுள்ள மாளிகைகளைப் பற்றி, அகழி சூழ்ந்த கோட்டைகளைப்பற்றி, சோலையில் ஆடிய மயிலைப்பற்றி, அது ஆங்கு நடந்த நாரிமணியைக் கண்டு வெட்கமடைந்ததுபற்றி, வணிகரின் வளத்தைப்பற்றி, வீரரின் திறத்தைப்பற்றிப் படிக்கும்போது, இவை, இன்ப வாழ்வு பெற்ற இடத்துக் காட்சிகள் என்று எவரும் கூறமுடியும். முன்னாளில்,


"வானிடை மிதந்திடும் தென்றலிலே
      மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
தேனிடை யூறிய செம்பவள
      இதழ்ச் சேயிழையா ரொடும்"

ஆடி இன்புற்ற நாடுதான் நம் நாடு. முன்னாள் பொன்னாளாகத் தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.