பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

49

பணக்காரனைப் பணம் திரட்டப் பாதகாணிக்கையாகத் தரச்சொல்லும் ஆசார்யனாய் வாழும் ஆரியர்களைக் காண்கிறீர்கள்.

இங்கே பஞ்சை பராரியை, பட்டினிப் பட்டாளத்தையும் பார்க்கிறீர்கள். பவனி வரும் பட்டுப் பட்டாடைக்காரனையும், அவன் கொட்டு முழக்கத்துடன் தூக்கிவரும் கோயில் சாமிகளின் கோலாகலத்தையும் காண்கிறீர்கள்.

பாட்டாளியின் உடலிலே சேறு இருக்கக்காண்கிறீர்கள். பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கக் காண்கிறீர்கள். தரித்திரம் தாண்டவமாடுவதையும் பார்க்கிறீர்கள். 'தனலட்சுமிகளாக' உள்ளவர்களையும் காண்கிறீர்கள்.

இந்த நிலை போக வழி என்ன என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடாமல், வந்த நிலைக்குக் காரணமாக வியாசர் கூறுவது என்ன, வேதம் சொல்வது என்ன என்று ஏடு புரட்டும் வேலையிலே ஈடுபடும் பெரியவர்களைப் பார்க்கிறீர்கள்.

ஜாதிக்குள் ஜாதி, குலத்துக்குள் குலம், ஒன்றுக்கொன்று சச்சரவு, என்ற பேதத்தின் பெருங்கூத்தைப் பார்க்கிறீர்கள். பேச வாயில்லையா ? கேட்கத் துணிவில்லையா ? எதிர்க்கத் தைரியமில்லையா ? இதற்கெலாம் நேரம் இல்லையா ? இவை உமது கடமை அல்லவா ?

தேசியம் பேசுவதால், இவற்றுக்கெல்லாம் நேரம் இல்லையாம். இந்நாடு, அன்னியனிடம் அடிமைப்பட்டிருக்கும் 'ஒரு தொல்லை' மட்டுமே இருப்-