வீரர் வேண்டும்
57
நமது குறிக்கோள், சகலரும் சமுதாயத்திலே சம உரிமையோடு வாழவேண்டும், பார்ப்பன ஆதிக்கம் தொலையவேண்டும், என்பதுதானே, இந்தப் பெருநோக்கம் ஈடேறப் பணிபுரிவோம், இந்தப் பிரச்னையிலே வேறு பலவற்றைக் கொட்டிக் குழப்ப வேண்டாம், என்று கூறுகின்றனர். கண்ணியர்கள் இதனைக் கூறும் போது, வீணாக அவர்கள் விசாரப்படுகிறார்களே என்று நாம் பச்சாத்தாபப்படுகிறோம். கயவர்கள் இதனைக் கூறும்போது, என் சொல்வோம்! ஒழுக்கம், நாணயம், அன்பு, அறிவு, சமரசம், சற்குணம், முதலியவற்றைப்பற்றி ஒருதுளியும் கவலைப்படாமல் வாழ்க்கையிலே இன்பத்தை எப்படியேனும் பெறவேண்டும், எத்தனைபேர் பிணமானாலும் கவலை இல்லை, பணம் குவிந்தால். போதும், எவ்வளவு ஒழுக்கக் கேடுகள் கூத்தாடினாலும் அக்கரை இல்லை, ஒய்யாரமான வாழ்வு கிடைத்தால் போதும், என்று கருதி, அரசியலை வாழ்க்கைக்குச் சுவை தரும் விபசார மார்க்கமாக்கும் போக்கினர், அரசியலிலே மதத்தைப் புகுத்திவிடுகின்றனரே என்று கூறி ஆயாசப்படுவதாக நடிப்பது, நகைப்புக்கு இடமட்டுமல்ல, பொதுமக்களை எவ்வளவு சுலபமாக ஏய்த்துவிடமுடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கும்போது, இச்செயல், சீரியோர்க்குச் சீற்றத்தை மூட்டாதிருக்கவும் முடியாது!
அரசியலைப்பற்றியும் அவர்கட்கு அக்கரை கிடையாது; மதத்தைப்பற்றியோ அவர்களுக்கு மாசும்தூசும் தவிர மற்றது தெரியாது. இரண்டிலும்