பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிடர் கழகம்

29


யாரின் தலைமையிலேகூடி நிற்கிறோம். அவர் களம். பல கண்டவர், போர்பல நடத்தியவர், போகவாழ்வை வெறுத்து ஏழைவாழ்வை நடாத்தி வருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும்கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச்சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப் போதும். வேறு சிலருக்கு வேறுசிலர் தேவையாம் !! நமக்கு அதுபற்றிக் கவலைவேண்டாம். போரிடத் தெரிந்த பெரியார், போர்வீரர்களுக்கு அழைப்புவிடுகிறார். போர்வீரர்கள் ! வருக, வருக ! நமக்கு வேறு அறிக்கை வேண்டாம்-தேவையுமில்லை.

உழைக்க வாருங்கள் ! பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள் ! உங்கள் இனத்தை மீட்கவாருங்கள், அதற்கு ஏற்றசக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள் ! போருக்கு வாருங்கள் அது எப்படி முடியும், எப்போது முடியும்! என்று என்னைக் கேட்காதீர்கள் :—இதுவே பெரியாரின் அறிக்கை.

ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப் பிரியர்கள் பாதையைவிட்டு விலகலாம், மானத்தைப் பெற, உயிரையும் இழக்கும் மனப் இழக்கும் மனப் போக்குடையோர் வரலாம்!!