பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

விடுதலை எதிரர்கள் ஐவர்

3
(வேறு)

கம்பமென்ற சொல் கேட்டுக் கொதில் ஊழிக்

கனல்புகுந்தாற் போல்துடித்தான்; கண்ணில் செந்தீ

கொப்பளிக்கக் கொதித்தெழுந்தான்; குலவை யிட்டான்;

கும்பினியான் தனநோக்கிக் குமுற லானான்;

“கப்பமென்ற கேட்டிட்டாய்? நாளும் எங்கள்

மாடுகளை ஏர்பூட்டிக் கழனி யாக்கிச்

செப்பரிய பாடுபட்டு, வியர்வை சிந்திச்

செந்நெல்லும் தானியமும் விளைத்தோர் உன்றன்

முப்பாட்டன் பரம்பரையா? அன்றேல் நீதான்

முதுகொடியப் பாடுபட்ட துண்டா ? எங்கள்

அப்பாணை சொல்கின்றேன்! கப்பம் என்றே

அரைக்காசும் உன்றனுக்கு அளிக்க மாட்டோம்!

“உப்பிட்ட, வீட்டுக்கே கெண்டி தூக்கும்

உலுத்தரைப்போல் உறவாடி எங்கள் நாட்டை

எப்படியோ தத்தளித்து வித்தை செய்தே

ஏமாற்றிப் பறித்திட்ட திமிரால், கூலிச்

சிப்பாய்கள் பலமுண்டு , காலை நக்கிச்

சேவிக்கும் அடியாட்கள் உண்டு, ஓட்டைத்

துப்பாக்கித் துணையுண்டு என்னும் தெம்பால்,

துணிந்தென்னைக் கப்பமெனக் கேட்டாய் அன்றோ?

“பாட்டலத்தால் எமையடக்கி ஆள- வெண்ணும்

பறங்கியரே! ஒருவார்த்தை பரஞ்சை என்றன்

குடைநிழலில் வாழுமட்டும், உடம்பில் சீவன்

குடிகொண் டிருக்குமட்டும், மானத் தோடு