பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டபொம்மன்

9

நடைபோட்டுத் தலைநிமிர்ந்து நிற்போ மல்லால்,

நயவஞ்சக் காரருக்கெம் பாஞ்சை மண்ணின்

உடைமரத்து நிழல்தானும் ஒதுங்கத் தாரோம்;

உயிர்கொடுத்துப் புகழ்காப்போம்; கப்பம் கட்டோம்!”
4
(வேறு)

இவ்வுரை கேட்டதும் கும்பினி யான்இனி

ஏதும் வழியிலே என்றுணர்ந்தே

செவ்வி மிகுந்திடும் பாஞ்சை யதிடனைச்

சிறைபி டிக்கவும் துணிந்து வீட்டான்.

கும்பினிப் பட்டாளம் சூழ்ந்துவரப் புலிக்

குகைக்குள் சிக்கிய கம்பளத்தான்

தம்பி துணையொடும் வானின் பலத்தொடும்

தப்பித்து நாடு திரும்பி வந்தான்.

நாடு திரும்பிய கட்டபொம்மன் கோட்டை

நாலு புறமும் பலப்படுத்தித்

தேடிவரும் பகை யோடு பொருதிடும்

தேதியை நோக்கிக் காத்திருந்தான்.

ஆண்பிள்ளை என்றுபி றந்தவர் யாவரும்

ஆயுதந் தாங்கத் துடிதுடிக்க,

சாண்பிள்ளை யாயினும் சல்லடம், கட்டியோர்

சன்னதங் கண்டு குதிகுதிக்க

தொண்டு கிழவரும் தோள் புடைக்க, அவர்

தொங்கிய மீசை கறுகறுக்க ,

பன்டைய வாலிபம் மீண்டது போலவர்

பாலாக் கம்பினைத் தான்சுழற்ற,