பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

விடுதலை வீரர்கள் ஐவர்

ஆ! நீயா என்று அதிர்ந்தவர் முன்னரங்கில்

பார்நீ இங்கெனப் பாசறைத் தலைவனாய்

ஆடி முடித்தவனே ஆடிக் கடைசியில்

பாடி வரச்சொன்னார் பாட்டைத் தொடங்குகின்றேன்.


பொங்கிவரும் புகழ்வேண்டிப் போராடும் வீரரொடு

செங்காளத்துப் போரினில் சிந்திய குருதியே

சிவப்புக் கங்கையாய்ச் சீறியோட அந்தச்

சிவப்புக் கங்கையேபின் சிவகங்கை யாயிற்று.

ஊர் நிறைந்திருக்கும் உலகத்துக் கோடியெங்கும்

போர் நிறைந்திருக்கும் படியான அவ்வூரில்,


வீர வெறியோடு வெற்றிப் பட்டயத்தை

ஈர ஓலையில் எழுதிவைத்தவர் பலருண்டு

மலைதடவும் இருதோளும் மழைதடவும் இருகரமும்

இலைதடவும் வடிவேலும் கொலைதடவும் கூர்வாளும்

கொம்பென்ற மீசையும் கொடிக்கம்ப நிலையும்

வம்பென்று வந்து வளைத்தவரின் தலைசீவ

கங்கை பின்வருவி சிவகங்கை யாகச்

செங்களம் பட நின்ற சிங்கங்கள் மருதிருவர்!

அடிகட்டிப் பின்னர் முடிகொண்ட கோபுரம்போல்

கொடிகட்டி ஆண்டார்கள் குருதிக்கும் நிலத்திற்கும்

கூட்டுறவை வைத்துக் கொண்டிருக்கும் உரிமையில்

நாட்டுறவை நெஞ்சில் நாட்டிவைத்த மாவீரன்

‘எங்களப்பன்’ என்ற இனிமையின் பான்மையில்

கங்கைச் சீமையில் தங்கிப் பாராண்டநாள்

தென்பாண்டித் திருநாட்டின் தீரன் ஊமைத்துரை

முன்பாண்ட இடம்விட்டு முள்ளாண்ட காடுறைந்து

மண்ணாசை கொண்டு மனத்தாசை வைத்த

பொன்னாசைக் காரர்பின் போராசை கொண்டிங்கு