பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி

27

சிந்து - கண்ணி
உள்ளத்திலே புரட்சி - அவரை
உந்திக் கிளப்பியதால்
கள்ளத்தனம் வெறுத்தார் - பழங்
கட்டுக்க ளையுதிர்த்தார்.
சாதி சமயங்களைப் - பேசிக்
சண்டைகள் செய்பவரை
மோதி மிதிப்ப னென்றார் - அவர்
முகத்தில் உமிழ்வ னென்றார்.
வேறு
மன்னரைச் செல்வரைப் பாடி வயிற்றை
வளர்ப்பதும் வாழ்வாமோ - ஏழை
கண்ணீரைப் பாடிக் கவலைகள் தீர்வது
கவிதை யென்றுரைத்தார்.
சின்னத்தனம் மிக்க மன்னவர் நட்பைச்
சீயென் றுமிழ்ந்துவிட்டே - அவர்
சென்னை நகர்வந்து பத்திரி கைத்தொழில்
செய்து பிழைத்து வந்தார்.
நிலைமண்டில ஆசிரியப்பா
அச்சம் விடுத்தா ரயலவர் ஆட்சியைத்
துச்சமாய் மதித்தார் தூள்தூ ளென்றார்
மீசையை முறுக்கி மேலே யேற்றினார்
சிங்க ஏற்றைச் சிந்தையில் நிறுத்தினார்
நெஞ்சை நிமிர்த்து நேரே பார்த்தார்