பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி

29

அறுசீர் விருத்தம்


வாஊசி யென்றபெரும்
வரிப்புலியொன் றெழுந்ததனால்
வெள்ளை ஆட்சி
யேஊசிப் போகு மென்று
நடுநடுங்கி அன்னவரைச்
சிறையி லிட்டார்
நாவீசிப் பாரதியார்
கொதித்தெழுந்தார், எரிமலைபோல்
குமுறிப் பொங்கி
ஆவேசப் பாடல்களை
ஆங்கிலப்பே ரரசஞ்ச
அடுக்கி விட்டார்.


சிந்து - கண்ணி


வாள்பிடித் தேஅர சாண்டவர் நாங்களும்
தாள்பிடித் தகிடப்போம் - அட
கூழ்குடித் தாலும் சாமல் எதிர் நின்று
கொண்ட பகைமுடிப் போம்

ஏழ்கட லுக்குமப் பாலுங் கடந்துசென்
றெங்கள் கல்ம்விடுத்தோம் - அட
ஆழ்கட லுக்குள் இறங்கித் தமிழ்முத்தை
அள்ளிக் கொணர்ந்து விற்றோம்.

வாளுக்கும் உங்கள்கை வேலுக்கும் பீரங்கி
வண்டிக்கும் அஞ்சுவமோ? - என்று
சூளுரைத் தஞ்சாமல் பாடித்தம் சொற்களில்
சுண்டி விட்டார் நெருப்பை