பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

விடுதலை வீரர்கள் ஐவர்


சட்டப் படிப்பட்ட பட்டப் பிடிப்புக்குள்
கட்டுப் படக்குனியேன் - மானம்
வெட்டுப் படத் துணியேன் - பிறர்
துட்டப் பிடிப்பினில் கட்டப் படுந் தாயின்
துயரை ஒழிப்பேன் என்றார் - தமது.
உயிரை அளிப்பேன் என்றார்
உரையே மாற்றியும் பேரையே மாற்றியும்
ஊரைஏ மாற்றியவர் - பல
பேரைஏ மாற்றியவர் - இந்தப்
பாரினில் உண்டு ; தன் நாட்டினைக் காத்திட
பற்பல வேடமிட்டார் - இவர் போல்
விற்பனர் வேறிங்குயார்?


பெண்டாற்றும் பொன்பற்றும் என்பற்ற
இல்லையெனப் பிரிந்த போதும்
மண்பற்றைத் துறக்காத துறவியிவர் ;
பிறவியிலே மறைய வர்தாம் ;
பின்பற்றும் ஒற்றர்க்கும் பிடிக்க வொண்ணா
மறையவர்தாம் ; பிடித்த தொண்டில்
என்பற்றுப் போனாலும் என் - பற்றுப்
போய் விடுமோ? என்ற அண்ணால்

***



பாரசீகர் கோலத்தில் ஐயர் ஓர் நாள்
பாரீசு புறப்பட்டார் கலத்தில் அந்த
வீரசிங்கம் வைத்திருந்த பெட்டிமீது
“வீ.வீ.எஸ்” எனும் பெயரைக் கண்டோர் ஒற்றன