பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைவர் முடிவுரை


சிறை வாழ்ந்தார்.... செக்கிழுத்தார் - இந்தத்
தரையாண்ட வெள்ளையரை விரட்டுதற்குக்
குறை ஆயுள் பெற்றது பலர் கொலையும் உண்டார்
உறை மீறி வெளிவந்த கத்திபோல
உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்.
அவர் பெருமை கூறுதற்கு
அணிவகுத்த இந்த நாளில்
விடுதலைக்கு உயிரீந்த
எவர் பெருமை கூறுதற்கும்
இவர் போலக்
கவி வளத்தைப் பெற்றேனில்லை
கவிதை பாடக் கற்றேனில்லை.
தலையறுத்த வீரர் கதை பாடுவதால்
தளை யகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர்
தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால்
தொடை தட்டும் என் பாட்டும். என் கவிதை,
யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம்நாடு
மொழி, மானம் உணர்வெல்லாம்,
கரப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்க யொண்குல்
வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்சுக்
காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் - நெஞ்சில்
ஊருகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை
மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று செல்வேன்
எத்தனை உயிர்கள்
எத்தனை சத்தம்
நித்தமும் தந்து பெற்றது விடுதலை.