பக்கம்:விடையவன் விடைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விடையவன் விடைகள்

பிரமசூத்திரம் என்று சொல்வர். முனிமொழி' என்றே ஒரு நூல் உண்டு. ஆனல் அது அவ்வளவு சிறந்த நூல் அன்று. -

349. வீர கோதண்டராம சுவாமி உலா என்ற நூல் இயற்றியவர் யார் ? .

பின்னத்துர் நாராயணசாமி ஐயர் என்னும் புலவர், தில்லைவளாகத்தில் எழுந்தருளியுள்ள இராமபிரானப் பற்றிப் பாடிய நூல் அது. நற்றிணையென்னும் சங்க நூலை முதல் முதலாகப் பதிப்பித்தவர் அந்தப் புலவர்.

350. பாட்டியல் என்ற நூல்கள் எந்த இலக்கணத்தைச் சொல்கின்றன :

ஒரு நூலின் முதலில் உள்ள சொல்லுக்கும் அந்த நூலின் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள பொருத்தத்தையும், பலவகைப் பிரபந்தங்களின் இலக்கணங்களையும் சொல்வது பாட்டியல். -

351. திருக்குறளுக்கு ஒரடி முக்கால் என்று பெயர் உண் டென்று புலவர் ஒருவர் சொன்னர். அது உண்மையா ?

குறள் வெண்பாவுக்கு ஒரடி முக்கால் என்று பெயர் இக் காலத்து மொழியில் சொன்னல் அதை ஒன்றே முக்கா லடி என்று சொல்வோம். முதலடி நான்கு சீரும் இரண்டாம் அடி மூன்று சீருமாக வருவதால் இந்தப்பெயர் வந்தது. திருக் குறள் என்பது பாட்டினல்வந்த பெயர்; அதுபோலவே ஒரடி

முக்கால் என்ற பெயரும் அமைந்தது.

352. குண்டலகேசி என்று ஒரு காவியத்துக்குப் பெயர் வரக் காரணம் என்ன ? அந்தப் பெயருக்குப் பொருள் யாது : -