பக்கம்:விடையவன் விடைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 95

361. பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல் கால வகையி குனே' என்னும் இரு விழுமிய அடிகள் தமிழ் இலக்கியத்தின்கண் எங்கே உள்ளன?

நன்னுரலில் வரும் சூத்திரங்களில் ஒன்று இது.

362. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற தொடர் எந்த நூலில் இருக்கிறது ?

சேந்தன் இயற்றிய திவாகரத்தில் இருக்கிறது.

363. தமிழ்ப் புலவர்களில் மகாமகோபாத்தியாயர் என்ற பட்டம் பெற்றவர்கள் யார் யார் ?

டாக்டர் உ. வே. சாமிநாதையர், பாஷாபாரததுரந்தரர் . ம. வீ. இராமாநுஜாசாரியார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்.

364. காவடிச் சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணுமலை ரெட்டியார் யாருடைய மாணவர் ? .

சிலகாலம் திருவாவடுதுறையில் இருந்து டாக்டர் ஐயரவர்களிடம் இலக்கணப்பாடம் கேட்டார். பல திரிபு யமகப் பாடல்களைப் பாடியிருக்கிரு.ர்.

365. கச்சியப்பர் என்ற பெயருடைய புலவர்கள் எவ்வளவு பேர்கள்? -

கச்சியப்ப சிவாசாரியார் என்பவர் ஒருவர்; அவர் கந்த புராணத்தை இயற்றியவர். கச்சியப்ப முனிவர் என்பவர்" ஒருவர்; அவர் விநாயக புராணம் முதலியவற்றை இயற்றி யவர். - " - - . - - - . . .

366. சேக்கிழாருக்குமுன்பு திருஞானசம்பந்தரைப்பற்றிப் பாடிய புலவர்கள் உண்டா ? . -