பக்கம்:விடையவன் விடைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விடையவன் விடைகள்

ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியிலும், நம்பியாண் டார் நம்பிகள் பல பிரபந்தங்களிலும் பாடியிருக்கிருர்கள்.

367. குருடராக இருந்த தமிழ்ப் புலவர்கள் யார் யார்? அந்தகக்கவி வீரராகவ முதலியார், மாம்பழக் கவிராயர், இரட்டையரில் ஒருவர். -

368. கம்பர், சேக்கிழார் இருவருள் முந்தியவர் யார் ?

கம்பரே முற்பட்ட காலத்தவர்.

369. ஒளவையார் மைசூரைச் சேர்ந்த தகடூர் என்ற ஊரில் பிறந்ததாக ஒருவர் எழுதியிருக்கிருர். அவர் மைசூர் மாநிலத்தைச் சார்ந்தவரா ?

ஒளவையார் பிறந்த ஊர் இன்னதென்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. தகடுரில் இருந்த அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவரை அவர் பாடியிருக்கிருர். தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரியே அக்காலத்தில் தகடுர் என்று வழங்கி வந் தது. அதன் அருகில் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது.

370. குமரகுருபர முனிவர் எந்த ஆதீனத்தின் தலைவராக இருந்தவர் ? - - .

அவர் எந்த ஆதீனத்துக்கும் தலைவராக இருந்ததில்லை. தருமபுர ஆதீனத்தில் இருந்த மாசிலாமணி தேசிகர் என்னும் ஞானசிரியரிடம் உபதேசம் பெற்ற துறவி அவர். காசியில் சென்று ஒரு மடத்தைத் தாபித்துச் சிவத்தொண்டு புரிந்து வந்தார். அந்த மடம் குமாரசுவாமி மடம் என்று இன்று வழங்கி வருகிறது. அந்த மடத்தில் அவருக்குப் பின் வந்த தில்லைநாயக சுவாமிகள் என்பவர் திருப்பனந்தாளில் ஒரு