பக்கம்:விடையவன் விடைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 97

மடத்தை நிறுவினர். காசியோடு தொடர்புடையதாதலின் அதற்குக் காசி மடம் என்ற பெயர் வந்தது.

371. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமி நாதையரவர்கள் தம்முடைய இல்லத்துக்குத் தியாகராஜ விலாசம் என்று பெயர் வைத்ததற்குக் காரணம் என்ன ? திருவாரூருக்கும் அவருக்கும். ஏதேனும் தொடர்பு உண்டோ :

ஐயரவர்களுக்குக் கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்து வந்த தமிழாசிரியர் வேலையை வித்துவான் தியாக ராச செட்டியார் பெறும்படி செய்தார். அந்த நன்றியை எண்ணி அப்படிப் பெயர் வைத்தார்கள். -

372. சிவஞான முனிவர் திருவாவடுதுறையாதீனத்தில் எத்தனையாவது பட்டத்தில் இருந்தவர் ?

சிவஞான முனிவர் ஆதீனத் தலைவராக இருக்கவில்லை. அவர் அடியார் கூட்டத்தில் ஒரு தம்பிரானக இருந்தவர். தலைவர்களைத் தேசிகரென்ற பெயரோடு வழங்குவார்கள்.

373. காந்தி புராணம் இயற்றிய புலவர் யார் ? அவர் வேறு நூல்களை இயற்றியது உண்டா ?

திருப்பாதிரிப்புலியூரில் இருந்த பண்டிதை அசலாம்பிகை அம்மையாரே காந்திபுராணம் இயற்றினர். அவர் திலகர் மான்மியம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

374. டாக்டர் உ. வே. சாமிநாதையர் கீர்த்தனை இயற்றியிருக்கிருரா ? .

இலங்கையிலுள்ள இலந்தை நகரில் எழுந்தருளியிருக்கும் முருகனைப்பற்றியும் அ வி நா சி யி ல் எழுந்தருளியுள்ள கருணும்பிகையைப்பற்றியும் கீர்த்தனங்கள் இயற்றியிருக் கிரு.ர்கள், - -