பக்கம்:விடையவன் விடைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விடையவன் வீடைகள்

375. அஷ்டாவதானம், சதாவதானம் என்பவை யாவை ?

ஒரே சமயத்தில் எட்டு விஷயங்களைக் கவனித்தல் அஷ்டாவதானம்; நூறு விஷயங்களைக் கவனித்தல் சதாவ தானம். கொடுத்த பாட்டுக்குப் பொருள் சொல்லுதல், கொடுத்த கருத்தை வைத்துப் புதிய கவி பாடுதல், மணியை இத்தனை முறை அடித்தார்கள் என்று சொல்வது, சதுரங்க விளையாட்டு விளையாடுதல், இடையே ஏதாவது கேட்டால் விடை கூறுதல், லாட சங்கிலி போடுதல், வேலும் மயிலுந் துணை என்று அடிக்கடி சொல்லுதல், நீண்ட பெயரை முறைமாற்றி எழுத்துக்களைச் சொல்லக் கடைசியில் பெயர் முழுவதையும் சொல்லுதல், ஜாதகம் பார்த்துப் பலன் கூறு தல் என்று பலவற்றைப் புலவ்ர்கள் கவனிப்பார்கள், அஷ்டா வதானம் வீராசாமி செட்டியார், அஷ்டாவ்தானம் சபாபதி முதலியார், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் என்று அப் பட்டங்களே உடையவர்கள் இருந்திருக்கிருர்கள். தெலுங்கு தேசத்தில் இன்றும் அஷ்டாவதானம் செய்பவர் கள் உண்டு.

376. உ. வே. சாமிநாதையரவர்கள் தம் பெயரின் முதலெழுத்துக்களைப் போடும்போது வே. ச். என்று போடு வார்களாம். ஏன் அப்படி ? ---, - ... "

- வே. சா. என்று போட்டால் சா என்பது அமங்கலமாகத்

தொனிக்கும் என்ற காரணத்தால் அப்படிப் போடுவார்கள். -

377. இராமாயணத்தை அன்றிக் கம்பர் வேறு என்ன இயற்றிஞர் ? - - - - சரசுவதி அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம்,

சடகோபர் அந்தாதி என்ற நூல்களையும் அவர் இய்ற்றின. ரென்று கூறுவர். - -