பக்கம்:விடையவன் விடைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விடையவன் விடைகள்

விரிக்கிருர்கள். டாக்டர் சாமிநாதையர் வைணவர் அல்லவே! அப்படியிருக்க அவரை எப்படி உ. வே. என்ற எழுத்துக்களை முதலில் இட்டு வழங்குகின்றனர் ?

ஐயரவர்கள் பிறந்த ஊர் உத்தமதானபுரம். அவர்கள் தந்தையார் பெயர் வேங்கடசுப்பையர். இந்த இரண்டையும் குறிக்கும் எழுத்துக்கள் உ. வே. என்பவை.

383. காஞ்சி என்ற பெயரையுடைய பழைய நூல்கள் cöröð6), P

பத்துப் பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி. பதினெண் கீழ்க் கணக்கில் உள்ள முதுமொழிக் காஞ்சி. இரும்பல் காஞ்சி என்ற நூல் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது.

384. பெருந்தொகை என்பது குறுந்தொகை போன்ற சங்க நூலா ? .

பெருந்தொகை என்பது அமரர் மு. இராகவையங்கார் தொகுத்து வெளியிடட தனிப்பாட்ல் திரட்டு.

385. உபதேச காண்டம் என்பது எத்தகைய நூல் ?

கந்த புராணத்தின் ஏழாவது காண்டம் உபதேச காண்டம். கோனேரியப்ப நாவலர், ஞானவரோதயர் என்ற இருவரும் தனித்தனியே அதைத் தமிழில் பாடியிருக்கிருர்கள்

386. குளுவ நாடகம் என்பது என்ன ?

குறவஞ்சியில் வேட்டையாடி வருபவகைச் 6)ಹಹir என்ற பாத்திரம் வருவதைக் காணலாம். அந்தச் சிங்கனுக்கு உதவியாளகை வருபவன் குளுவன். அவனே மையமாக வைத்துப் பாடிய பிரபந்தம் அது. குளுவ நாடகம் எதுவும்

- в . ، يا جة ليتني : جامعيين துவும் அச்சேறியிருப்பதாகத் தெரியவில்லை. - -